தஞ்சை அரசு மருத்துவமனையில் 995 குழந்தைகள் மரணம்!

அக்டோபர் 10, 2019 494

தஞ்சாவூர் (10 அக் 2019): தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து மக்கள் அந்த மருத்துவமனை செல்ல அச்சப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. அதனடிப்படிடையில், தஞ்சையில் மருத்துவமனை முதல்வர் குமுதா லிங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது, “ தஞ்சை அரசு மருத்துவமனையில் 16,421 குழந்தைகள் கடந்த ஆண்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் 995 குழந்தைகள் இறந்ததாக கூறும் தகவல் உண்மை தான் இரண்டிலிருந்து மூன்று சதவிகிதம் குழந்தைகள் இறப்பதை தவிர்க்க முடியாது. “ என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ”கர்ப்பத்திலேயே இறந்தது 322 குழந்தைகள், இதயம், மூளை உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகள் 200,பிற இடங்களில் சிகிச்சைக்கு கொண்டு சென்று தாமதமாக தஞ்சை இராசா அரசு மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 120, அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 353” என 995 குழந்தைகளின் இறப்புக்கும் புள்ளி விபரம் தெரிவித்தார் மருத்துவமனை டீன்.

மேலும், “ 995 குழந்தைகள் இறந்ததால் மருத்துவமனை நிர்வாகம் சரியில்லை என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...