தமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த சர்ச்சை!

அக்டோபர் 11, 2019 383

சென்னை (11 அக் 2019): பிரதமர் மோடியை வரவேற்க யாரும் வரக்கூடாது என்று தமிழிசை ஆதரவாளர்களுக்கு பாஜக தடை விதித்துள்ளதால் திடீர் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சீனா அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், அவரை வரவேற்க தமிழிசை ஆதரவாளர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

வழக்கமாக பிரதமர் மோடி சென்னை வரும் போது தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர்களாக இருந்த 3 பேர், இளைஞரணித் தலைவர் வினோஜ், ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் 2 பேர் மற்றும் மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன் என குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அனுமதி பெறப்பட்டிருந்தது.

தற்போது தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா ஆளுநராகிவிட்டதால் தமிழக பாஜக புரோட்டாக்கால் மாற்றப் பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழிசை ஆதரவாளர்கள் யாரும் மோடியை வரவேற்க வரக்கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது . இதுகுறித்து அமித்ஷாவிடம் புகார் அளிக்க தமிழிசை ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...