சீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அரசு!

அக்டோபர் 12, 2019 342

சென்னை (12 அக் 2019): சீன அதிபர் ஜி ஜின்பிங் சாலையில் செல்ல வேண்டும் என ஆசைப் பட்டதை அடுத்து அவர் சாலை வழியே மாமல்லபுரத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் மூன்று நாள் பயணமாக நேற்று சென்னைக்கு வந்த சீன அதிபர், பிரதமர் மோடி உடன் நேற்று மாலை சந்திப்பு நடத்தினார். இதற்கிடையே இந்த மூன்று நாள் சந்திப்பில் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட உள்ளது.

முன்னதாக நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நேற்று முதலில் ஜி ஜின்பிங் கிண்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்வதாக இருந்தது. மூன்று நாட்களும் அவர் ஹெலிகாப்டர் பயன்படுத்துவதாக இருந்தது. பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் ஜி ஜின்பிங் சென்னையில் சாலையில்தான் செல்ல வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறி உள்ளார். முதலில் இதை மத்திய அரசு ஏற்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கடைசி கட்டத்தில் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு, மாமல்லபுரம் விழா நடக்கும் பகுதிக்கு காரில் செல்ல ஏற்பாடுகள் செய்யப் பட்டது

இதனால்தான் சென்னையில் சாலைகள் சரி செய்யப்பட்டு. ஸ்பீட் பிரேக்கர்கள் நீக்கப்பட்டு. சாலை போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனால்தான் சென்னையில் பல்வேறு இடங்களில் புதிதாக அலங்காரம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று இரண்டாம் நாள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு முழுவதும் கோவளத்தில் உள்ள ஓட்டலில் நடைபெறும். இதற்காக காலை 9.05 மணிக்கு சீன அதிபர் கிண்டி ஓட்டலில் இருந்து கோவளம் செல்கிறார். 9.50 மணிக்கு மோடி தங்கியிருக்கும் ஓட்டலுக்கு செல்லும் சீன அதிபர், அங்கு மோடியுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். பின்னர் இருநாட்டின் உயரதிகாரிகள் கலந்துகொள்ளும் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடைபெறும். அதனை தொடர்ந்து மதிய விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் வர்த்தகம், தீவிரவாத ஒழிப்பு ,எல்லை பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

அதன் பின்னர் சீன அதிபர் விமானம் நிலையம் செல்கிறார். அங்கிருந்து நேபாளம் செல்கிறார் சீன அதிபர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். மதியம் அவர் அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...