நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

அக்டோபர் 12, 2019 183

சென்னை (12 அக் 2019): நீட் ஆள்மாறாட்டம் தொடர்பில் இது தொடர்பான கல்லூரிகளை ஏன் விசாரிக்கவில்லை என்று .பி.சி.ஐ.டி தரப்பிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த மனு மீதான விசாரணை, தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்றக் காவலை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. தொடர்ந்து நால்வரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

நால்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``பிரவீன் மற்றும் ராகுல் ஆகியோர் எந்தத் தவறும் செய்யவில்லை. நீட் தேர்வு முறையாக எழுதி கலந்தாய்வில் அரசுக் கல்லூரி கிடைக்காத காரணத்தால் தனியார் கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் முன்னிலையில்தான் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று சேர்க்கையும் நடந்திருக்கிறது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்துக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று வாதிட்டார்.

அதைக் கேட்டுக்கொண்ட நீதிபதி, ``மாணவர்களின் கல்லூரி சேர்க்கையின்போது கல்லூரி நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட கமிட்டிதான் சான்றிதழ்களை சரிபார்த்திருக்கிறது. அந்த கமிட்டியிடம் ஏன் விசாரணை செய்யவில்லை” என சி.பி.சி.ஐ.டி தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, சி.பி.சி.ஐ.டி தரப்பில், ``அக்கமிட்டியை விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என பதிலளித்தனர். நால்வரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...