திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு!

அக்டோபர் 13, 2019 428

சென்னை (13 அக் 2019): நாங்குநேரி விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவு தெரிவிப்பதாக எஸ்டிபிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்.21 அன்று நடைபெறவிருக்கும் விக்ரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி-காமராஜர் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போதைய அரசியல் சூழலை கருத்தில்கொண்டு நடைபெறவிருக்கும் இந்த இடைத்தேர்தலில், திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

ஆகவே, இடைத்தேர்தல் நடைபெறும் விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி, நாங்குநேரி தொகுதியில் போட்டிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் மற்றும் புதுச்சேரி-காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் ஆகியோரின் வெற்றிக்குப் பணியாற்றுமாறு கட்சியின் தொண்டர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...