பிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்!

அக்டோபர் 13, 2019 267

மதுரை (13 அக் 2019): மதுரையில் தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்த மாணவன் ஒருவரின் முதுகில் சக மாணவர் பிளேடால் கீறி கொடுமைப் படுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் மறவ பட்டியை சேர்ந்த சரவணகுமார்

அதே வகுப்பில் அவருடன் பயின்று வரும் சக மாணவர் ஒருவர் பாடவேளையின்போது சரவணகுமாரின் புத்தகப்பையை மறைத்து வைத்து ஆட்டம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்ததும், அதை சரவணகுமார் தட்டிக் கேட்டபோது மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மறைத்து வைத்திருந்த பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்து விட்டு தப்பியோடியுள்ளார் சக மாணவர்.

ரத்தம் கொட்டும் நிலையில் மாணவர் சரவணகுமார், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் என் மகன் தாக்கப் பட்டுள்ளார் என்று சரவணகுமாரின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...