மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்!

அக்டோபர் 13, 2019 176

சென்னை (13 அக் 2019): பிரதமர் மோடி ஜின்பிங் நடத்திய ஆலோசனையில் காஷ்மீர் விவகாரம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபர் 2 நாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். நேற்று முன் தினம் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் மோடியும் நேரில் பார்வையிட்டனர். அதன் பிறகு, நேற்று கோவளத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பு குறித்தும் இரு தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும் காஞ்சிபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே. `` "இந்த இரு நாள் உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் மொத்தமாக ஆறு மணி நேரம் தனியாகப் பேசியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் சேவைகள் போன்றவை குறித்து விவாதிக்க ஒரு புதிய உயர்மட்ட குழு உருவாக்கப்படும். இரு நாட்டு மக்களின் உறவில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆலோசனை பரிமாறப்பட்டது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. உள்நாட்டு விவகாரத்தில் நம் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. சீனாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். மான்சேவார் யாத்திரை செல்லும் யாத்திரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அதிக வசதி குறித்து சீன அதிபர் ஆலோசித்தார். தொடர்ந்து சீனா - தமிழக உறவு குறித்து பிரதமர் மோடி பேசினார். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது மிகவும் முக்கியமானது என இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்” என மோடி - ஜின்பிங் ஆலோசனை பற்றி கோகலே பேசியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...