சீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்!

அக்டோபர் 13, 2019 330

சென்னை (13 அக் 2019): ராஜீவ் காந்தி கொலையை நியாப் படுத்தி பேசிய சீமானை சிறையில் தள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சில், ராஜீவ் காந்தி படுகொலை நியாயப் படுத்தும் விதமாக பேசியிருந்தார். மேலும் இலங்கையில் அமைதிப் படையை அனுப்பி வைத்ததாலேயே ராஜீவ் காந்தி கொல்லப் பட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சீமானின் இப்பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...