ராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை - சீமான் திட்டவட்டம்!

அக்டோபர் 14, 2019 350

சென்னை (14 அக் 2019): ராஜீவ் காந்தி குறித்த கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தேர்தல் பொதுக்கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ’ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

அவருடைய பேச்சு மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சீமானுக்கு எதிராக விக்ரவாண்டி காவல்துறையினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய சீமான், ‘ராஜீவ் காந்தி குறித்த பேச்சைத் திரும்பப் பெறமாட்டேன். இதுபோன்று பல வழக்குகளைச் சந்தித்துவிட்டேன். சிதம்பரத்தை வெளியே கொண்டு வரவும், என்னை உள்ளே தள்ளவும் போராடுகிறார்கள். இப்போது, நான் பேசியதால் என்ன கலவரம் வந்துவிட்டது? வழக்கை சட்டப்படி சந்திப்ப்பேன்" என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...