தீபாவளியை முன்னிட்டு பேருந்து முன்பதிவுகள் மும்முரம்!

அக்டோபர் 14, 2019 133

சென்னை (14 அக் 2019): தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பயணிக்க தற்போது வரை 51 ஆயிரத்து 208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்ல 33 ஆயிரத்து 870 பேரும், மற்ற இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 17 ஆயிரத்து 338 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு 2 கோடியே 55 ஆயிரம் ரூபாய் வரை வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com என்ற இணையதளங்களிலோ அல்லது கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...