தமிழகத்தில் மூன்று பேசஞ்சர் ரெயில் சேவை தொடக்கம்!

அக்டோபர் 15, 2019 201

பொள்ளாச்சி (15 அக் 2019): தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் - கரூர், பழனி - கோயம்புத்தூர், பொள்ளாச்சி - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது.

கரூரிலிருந்து பகல் 11.40க்கு புறப்படும் ரயில் சேலத்திற்கு மதியம் 1.25 மணியளவில் வந்து சேர்கிறது. பின்பு சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணியளவில் புறப்படும் ரயில், கரூருக்கு மதியம் மாலை 3.25 மணிக்கு சென்றடைகிறது.

அதைப்போன்று கோவையிலிருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 4.40 மணிக்கு பழனி செல்லும் என்றும், பழனியில் இருந்து காலை 10.45 செல்லும் ரயில் மதியம் 2.10 மணிக்கு கோவை சென்றைடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில், காலை 8.40 மனிக்கு கோவைக்கு சென்றடையும் என்றும், கோவையிலிருந்து காலை 5.45 மணிக்கு தொடங்கும் ரயில் காலை 7 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...