மோடி சீன அதிபர் சந்தித்துப் பேசிய மாமல்லபுரம் மண்டபம் திடீர் பழுது!

அக்டோபர் 16, 2019 328

சென்னை (16 அக் 2019): பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திய மாமல்லபுரம் மண்டபம் திடீரென பழுதாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி பாரத பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே முறைசாரா உச்சி மாநாடு நடைபெற்றது. இதனையடுத்து பல்லவர் காலத்தில் கட்டபெற்ற கலை நுட்பம் வாய்ந்த இடம் உலகமெங்கும் பிரபலம் ஆனது.

இந்நிலையில் அந்த மண்டபத்தில் உள்ள ஒரு பகுதி நேற்று பெய்த மழையால் இடிந்து விழுந்துள்ளது. இப்பகுதிதான் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்த போது கட்டுப்பாட்டு அறையாகச் செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

ஆனால் பெரிய அளவுக்கு எதுவும் சேதமில்லை என்றும் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...