ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சை தொடர்ந்து இப்போது வேறு கருத்தை கூறும் சீமான்!

அக்டோபர் 17, 2019 336

சென்னை (17 அக் 2019): தமிழர்களை கொன்று குவித்தவர்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனா மதியழகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த சீமான், தங்களுக்கு நிலையான தலைவர் இல்லாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருவதாக கூறினார்.

முன்னதாக ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சை பேச்சு பேசி சிக்கலில் சிக்கிய சீமான் இப்போது திமுக காங்கிரஸை குற்றம் சாட்டி வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...