ஏழு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

அக்டோபர் 19, 2019 290

சென்னை (19அக் 2019): தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை, 2 நாளைக்கு முன்பு துவங்கியது. இதனால் வங்க கடலில், வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டதால், வட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை கொட்டியது. அதிலும் எப்பவுமே பெய்யாத சென்னையில்கூட, பேய் மழை அடித்து ஓய்ந்தது. அதுபோன்றே இப்போது, இன்னும் 7 மாவட்டங்களலும், கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...