தஞ்சை அருகே தொடர் வழிப்பறி - போலீசுக்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த ரமேஷ் கைது!

அக்டோபர் 19, 2019 301

தஞ்சை (19 அக் 2019): தஞ்சை அருகே தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தஞ்சையை சேர்ந்த ரமேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சையை அடுத்துள்ள பகுதி வல்லம். இங்குள்ள சுற்று வட்டாரங்களில் நிறைய வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. குறிப்பாக பள்ளியக்ரஹாரம் பிள்ளையார் பட்டி புறவழிச்சாலையில் யார் வந்தாலும், அவர்களிடம் கட்டாயம் கொள்ளை நடந்துவிடும்.

பைக்கில் வந்தாலும், தனியாக வந்தாலும்,அவர்களை மறித்து, நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. இதை செய்து வந்தவர்கள் முகமூடி கொள்ளையர்கள். கையில் ஆயுதங்களையும் வைத்து கொள்ளையில் ஈடுபடுவதால், இவர்களை யாராலுமே பிடிக்க முடியாமல் இருந்தது.

இது சம்பந்தமாக நிறைய புகார்கள் போலீசுக்கு சென்று கொண்டே இருந்தது. போலீசாரும் 2 வருடமாக இந்த கொள்ளையை நடத்துவது யார்என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இறுதியில் தொடர்ந்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது . தஞ்சை மானோஜி பட்டியை சேர்ந்த ரமேஷ் என்று தெரிய வந்தது.

27 வயதாகும் ரமேஷ்தான் இதுவரை 2 வருடமாக நடந்து வந்த எல்லா கொள்ளைக்கும் காரணம் என விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ரமேஷுடன் மொத்தம் 3 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளைகளில் ஈடுபட்டது இதற்கு ரமேஷ்தான் தலைவன் என்றும் தெரிய வந்தது. இவர்களது நேரம் இரவு 7 மணி முதல் 10 மணி வரையாம். பைபாஸ் ரோட்டில் போய் இந்த நேரத்தில் நின்று கொள்வார்களாம். அந்த பக்கமாக வருபவர்களை தாக்கி பணம், நகை கொள்ளை அடிப்பார்களாம். தற்போது ரமேஷ் மட்டும்சிக்கி உள்ள நிலையில், மீதமுள்ள 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...