இளம் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு மிரட்டும் போலீஸ் அதிகாரி!

அக்டோபர் 19, 2019 258

நாகை (19 அக் 2019): இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு மிரட்டல் விடுப்பதாக காவல்துறை உதவி ஆய்வாளர் மீது புகார் எழுந்துள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வில்லியணல்லூரை சேர்ந்த சுபஸ்ரீ தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். திட்டச்சேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் என்பவருக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருந்ததன் விளைவாக சுபஸ்ரீ கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து விவேக் ரவிராஜ், சுபஸ்ரீயை சென்னைக்கு அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. தற்போது சுபஸ்ரீயை திருமணம் செய்ய விவேக் ரவிராஜ் மறுத்து வருவதாக தெரிகிறது.

அதனைத்தொடர்ந்து, திருமணத்திற்கு மறுக்கும் விவேக் ரவிராஜ் மீது சுபஸ்ரீ, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் விவேக் ரவிராஜ், தமது அதிகாரத்தை பயன்படுத்தி புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் புகாரை திரும்பப்பெற கோரி அரசியல்வாதிகளை ஏவிவிட்டு மிரட்டுவதாகவும் பெண் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள சுபஸ்ரீ கோரிக்கை விடுப்பதும், அதனை உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மறுக்கும் தொலைபேசி உரையாடல் வெளியாகியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...