கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக தலைவர் கைது!

அக்டோபர் 19, 2019 221

மதுரை (19 அக் 2019): மதுரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக செய்ற்பாட்டாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அன்னபார்பட்டியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியை மறிந்த மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, சரவணனிடம் இருந்த 19 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக உசிலம்பட்டி போலீசில் சரவணக்குமார் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டது உசிலம்பட்டி நகரத்தலைவர் நல்லமலை என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...