இந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் மீது போலீசில் புகார்!

அக்டோபர் 20, 2019 514

கோவை (20 அக் 2019): இந்து கடவுள்களை அவமரியாதையாக பேசியதாக தொழிலதிபர் காரப்பன். மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையைச் சேர்ந்தவர், காரப்பன். டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர். இவர், கோவையில் நடந்த, திராவிடர் இயக்க தமிழர் பேரவை கருத்தரங்கில், ஹிந்து கடவுள் கிருஷ்ணர் மற்றும் அத்திவரதரை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து காரப்பன் மீது நடவடிக்கை கோரி, வீடியோ ஆதாரத்துடன், ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் சார்பில், சிறுமுகை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...