முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்!

அக்டோபர் 20, 2019 229

சென்னை (20 அக் 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப் பட்டது.

நிகர்நிலை பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 28-வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்குகினார். நிறுவனத்தின் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் முன்னிலை வகித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செங்கோட்டையம், எஸ்.பி. வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...