முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் உத்தரவு!

அக்டோபர் 20, 2019 295

புதுச்சேரி (20 அக் 2019): ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்றதால் முதல்வர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுவை காமராஜர் நகர் தொகுதி பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் 2 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்தார். ஹெல்மெட் அணியாமல் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஸ்கூட்டரில் ஊர்வலமாக வந்த படம் பத்திரிகையில் வெளியாகி இருந்தது.

இந்த படத்துடன் கவர்னர் கிரண்பேடி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மோட்டார் வாகன சட்டத்தை மீறும் இச்செயல் வெட்கக்கேடானது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகள், சட்டங்கள் மீறப்பட்டுள்ளது. புதுவை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவாவிடம் சட்டத்தின் உத்தரவுகளை மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இதனால் முதல்- அமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...