முஸ்லிம்களின் வாக்குகளுக்காக திமுகவின் திட்டமிட்ட சதி - அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

அக்டோபர் 21, 2019 303

சென்னை (21 அக் 2019): முஸ்லிம்களை நான் அவமரியாதையாக பேசியதாக செய்தி பரப்புவது திமுகதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக களக்காட்டில் பிரசாரம் செய்து கொண்டிருந்த அதிமுக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடை பிரச்னை தொடர்பாக மனு அளித்ததாகவும், அந்த மனுவை அமைச்சர் வாங்க மறுத்து, அவர்களிடம் இஸ்லாமியர்கள் யாரும் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை. பின்னர் எதற்கு எங்களிடம் கொண்டு வந்து மனு தருகிறீர்கள்? என்று பொறுப்பற்ற முறையில் நடந்ததாகவும் புகார் எழுந்தது. அமைச்சரின் இந்நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வாறு எதுவும் அவமரியாதையாக பேசவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் புகார் அளிக்க வருபவர்கள் இரவிலா வருவார்கள்? காலையில்தான் வருவார்கள், என்னிடம் புகார் அளிக்க வந்தவர்கள் திமுகவினர். மேலும் அவர்கள் வரும்போதே புகார் அளிக்க வருபவர்கள் போல் வரவில்லை, மாறாக என்னிடம் பிரச்சனை செய்ய வேண்டும் என்றே வந்தனர். எனினும் நான் அதனை சாதுர்யமாக கையாண்டேன். முஸ்லிம்களை எந்த சூழலிலும் அவமரியாதையாக நான் பேசவில்லை. இது திமுக பரப்பும் அபாண்ட குற்றச்சாட்டு." என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...