பாமக தேமுதிகவினரிடையே அடிதடி மோதல்!

அக்டோபர் 21, 2019 253

விக்கிரவாண்டி (21 அக் 2019): விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள ஒரு பூத்தின் அருகே பாமக தேமுதிகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடியாக மாறியது.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்துவருகிறது. இந்நிலையில், கல்யாணம்பூண்டியில் அமைந்துள்ள 96வது பூத்தில் இயல்பாக வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடிக்கு சுமார் 100 மீட்டர் அருகாமையில் பாமக நிர்வாகி மணிகண்டன் என்பவருக்கும், தேமுதிக நிர்வாகி சேகர் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஒரு காவலர் அவர்களை தடுக்க முயற்சி செய்த போதிலும் அவரையும் மீறி தேமுதிக நிர்வாகிகள் 10 க்கும் மேற்பட்டோர் பாமக நிர்வாகி மணிகண்டனை தாக்கத் தொடங்கினர்.

தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர். இரு தரப்பையும் போலீஸார் தலையிட்டு விலக்கி விட்டனர்.

விசாரணையில் தேமுதிகவின் சேகர் மற்றும் பாமகவின் மணிகண்டன் இருவரிடையே பணம் பங்கிட்டுக்கொள்வதில் இந்த தகராறு ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரும் கைகலப்பு வரை சென்றுவிட்டனர்.. இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...