எச்.ராஜா புண்ணியத்தில் சக்கை போடு போடும் காரப்பன் சில்க்ஸ் வியாபாரம்!

அக்டோபர் 21, 2019 2113

கோவை (21 அக் 2019): பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் ஒரே ஒரு ட்விட்டால் கோவை சிறுமுகை காரப்பன் சில்க்ஸில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையைச் சேர்ந்தவர், காரப்பன். டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர். இவர், கோவையில் நடந்த, திராவிடர் இயக்க தமிழர் பேரவை கருத்தரங்கில், பேசிய பேச்சு சர்ச்சையானது. இதனை அடுத்து இந்துத்வா அமைப்புகள் இவருக்கு எதிராக கொதித்தெழுந்தன.

மேலும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா அவரது ட்விட்டர் பதிவில் காரப்பன் டெக்ஸ்டைல்சில் எந்த இந்துவும் துணிகள் வாங்கக் கூடாது என்றும், அனைவரும் அந்த கடையை புறக்கணிப்போம் என்றும் பதிவிட்டிருந்தார்.

விளைவு தேசிய அளவில் WeSupportKarappanSilks என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. மேலும் இந்த கடைக்கு அதிக விளம்பரத்தையும் தற்போது தேடித் தந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...