ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் - ஆனால் வெளி வருவதில் சிக்கல்!

அக்டோபர் 22, 2019 331

புதுடெல்லி (22 அக் 2019): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

சிபிஐ பதிவு செய்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனு மீது நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தி வந்தது.

ப. சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தரப்பு வாதங்கள் முடிவடைந்தன. இதை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.

ப. சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ரூ .1 லட்சம் பத்திர தனிப்பட்ட ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறி உள்ளனர்.

இதற்கிடையே சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதிலும், அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதல் ஜாமீன் கிடைத்தும் ப.சிதம்பரம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...