மதுக்கடைகளை மூட வேண்டும்: பொன் ராதா கிருஷ்ணன் - முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்!

அக்டோபர் 22, 2019 239

சென்னை (22 அக் 2019): மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உருவாக வாய்ப்பு இருப்பதால் இப்போதைக்கு மூட முடியாது என்றும் படிப்படியாக மூடப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில், அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சி திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும், திமுகவின் எந்த முயற்சிகளும் எடுபடாது என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 7 பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையில், அதுகுறித்த விவதாங்கள் தேவையில்லை என்றார்.

இதற்கிடையே முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...