நாம் தமிழர் கட்சி பிரமுகரை தாக்கிய நான்கு பேர் கைது!

அக்டோபர் 22, 2019 167

புதுக்கோட்டை (22 அக் 2019): நாம் தமிழர் கட்சி பிரமுகர் வினோத் குமாரை தாக்கிய டோல் கேட் ஊழியர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே வினோத் குமார் என்ற நாம் தமிழர் கட்சிப் பிரமுகருக்கும் சுங்கச் சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் வினோத் குமார் கடுமையாக தாக்கப் பட்டார்.

இந்நிலையில் வினோத் குமார் மாத்தூர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழழகன், குணா,சந்துரு மற்றும் ஆனந்த் ஆகிய நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...