பட்டாசு வெடிக்கும் நேர விதிகளை மீறினால் அபராதம்!

அக்டோபர் 23, 2019 182

சென்னை (23 அக் 2019): தீபாவளியை முன்னிட்டு : தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், அதேபோல மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி பட்டாசு வெடித்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சீன நாட்டு பட்டாசுகளை விற்கவும் கூடாது, அதை வாங்கவும் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...