சென்னை மெட்ரோவில் சுலபமாக பயணிக்க புதிய முறை விரைவில் அறிமுகம்!

அக்டோபர் 23, 2019 183

சென்னை (23 அக் 2019): மெட்ரோ ரெயிலில் சுலபமாக பயணிக்க இன்னொரு திட்டத்தை சென்னை மெட்ரோ அறிமுகப்படுத்தவுள்ளது.

பயணிகள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிய ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ‘டைட்டன்’ வாட்ச் நிறுவனம் புதிய ‘சிப்’ பொருத்திய கைக்கடிகாரத்தை தயாரிக்கிறது. இதன் மூலம் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் எளிதில் செல்ல முடியும்.

நுழைவு பாதையில் உள்ள மிஷினில் கைக்கடிகாரத்தை காண்பித்தால் தானாக கதவு திறக்கும். எளிதில் உள்ளே செல்ல முடியும். டிக்கெட் எடுக்க காத்திருக்க தேவையில்லை. ரூ. 1,000 செலுத்தி கைக்கடிகாரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...