இந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு!

அக்டோபர் 23, 2019 416

சென்னை (23 அக் 2019): பள்ளி மற்றும்கல்லூரிகளில் மத ரீதியாக மாணவர்கள் ஒன்றிணைந்து இயக்கமாக செயல்படுவதை தடுக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மற்றும் கல்லூரி அளவில் இந்து இளைஞர் முன்னணி மற்றும் இந்து மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் மாணவர்களை மதரீதியாக திரட்ட முயல்வதாகவும் ஒழுக்கக் கல்வி, பக்தி, புராணம், இதிகாசம் போன்றவற்றை போதிப்பது போல் மாணவர்களை சித்தாந்த ரீதியாக திரட்டி வருவதும் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதுபோல் கல்லூரிகளில் குழுக்களாக இந்து மாணவர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் பணியில் இந்து இளைஞர் முன்னணி ஈடுபட்டிருப்பதாகவும் அக்குழு "லவ் ஜிகாத்" போன்ற இந்து பெண்களை காதலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாகவும் புகார் வந்துள்ளது.

எனவே இதுபோன்று மதரீதியாக மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதை கண்டறிந்து தடுக்க வேண்டும் என்றும் உடனடியாக இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக அனுப்பவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...