நாம் தமிழர் வேட்பாளரை பின்னுக்கு தள்ளிய சுயேட்சை வேட்பாளர்!

அக்டோபர் 24, 2019 441

நாங்குநேரி (24 அக் 2019): நாங்குநேரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுயேட்சையாக களமிறங்கிய வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதன் மூலம், திமுக, காங்கிரஸ் வசமிருந்த தொகுதிகளை அதிமுக தற்போது தனதாக்கியுள்ளது.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் வேட்பாளரை தவிர போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். மேலும் அதிமுக, காங்கிரஸ் தவிர்த்து மிக முக்கியமாக பார்க்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் ராஜ நாராயணன், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஹரி நாடாரை விட குறைந்த வாக்குகளே பெற்றுள்ளார்.

இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி 3488 வாக்குகளும் அவரை சுயேட்சை வேட்பாளர் ஹரி நாடார் 4242வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...