மீண்டும் தொடங்கியது 2ஜி வழக்கு!

அக்டோபர் 24, 2019 262

புதுடெல்லி (24 அக் 2019): கனிமொழி மற்றும் ஆ.ராசாவுக்கு எதிரான 2ஜி முறைகேட்டு வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகனிமொழி எம்பியும், ஆ.ராசா எம்பியும் விடுவிக்‍கப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ. டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் பதிலளிக்க ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் விரிவான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

தொடர் விசாரணையை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 1-ம் தேதிக்கு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஒத்திவைத்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...