குழந்தை சுர்ஜித்துக்காக டெல்லியிலிருந்து முதல் குரல்!

அக்டோபர் 27, 2019 385

புதுடெல்லி (27 அக் 2019): குழந்தை சுர்ஜித் உயிருடன் மீட்கப்படுவார் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

அவனை மீட்கும் பணிகள் சுமார் 50 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பலரும் சிறுவன் சுர்ஜித்துக்காக பிரார்த்தித்து வருகின்றனர். பல அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என சிறுவன் விரைவில் மீட்கப் பட வேண்டும் என்று பிரார்த்தித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சுர்ஜித்தின் உயிருக்கும் நேரத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் போராட்டத்தை சுட்டிக்காட்டியுள்ளார். சுர்ஜித் மீட்கப்பட்டு அவனது பெற்றோரிடம் சேர்க்கப்படுட வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியோ வேறு எந்த கட்சித் தலைவர்களோ டெல்லியிலிருந்து சிறுவன் சுர்ஜித் குறித்து வாய் திறக்காத நிலையில் ராகுல் காந்தி மட்டும் ஆறுதலாக டெல்லியிலிருந்து முதல் ஆறுதல் குரலாக ஒலித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...