சுர்ஜித் மீட்புப் பணியில் தொடரும் சிக்கல் - மற்றொரு ரிக் எந்திரமும் பழுது!

அக்டோபர் 28, 2019 215

திருச்சி (28 அக் 2019): சிறுவன் சுர்ஜித்தை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு நான்காவது நாளாக 66 மணி நேரத்தை கடந்து முயற்சி எடுத்து வருகிறது.

நேற்று இரவு 12 மணியிலிருந்து அதிவேக திறன் கொண்ட ரிக் இயந்திரம் துளையிடும் பணியில் ஈடுபட்டுவருகிறது. தற்பொழுது வரை 40 அடியை தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வ தகவலாக வருவாய் நிர்வாகம் ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ரிக் இயந்திரத்தின் போல்ட் நட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்காலிகமாக பள்ளம் தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாறையின் கடினத்தன்மையை கண்டறிய தீயணைப்பு வீரர் ஒருவர் தற்போது தோண்டப்பட்டுள்ள அந்த 45 அடி குழிக்குள் இறக்கப்பபட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...