ப.சிதம்பரத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

அக்டோபர் 28, 2019 175

புதுடெல்லி (28 அக் 2019): டெல்லி திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 15 நாள் விசாரணைக்கு பிறகு, ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து இவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இவரின் ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை தொடர்ந்து விசாரித்து வந்தது.

திகார் சிறையில் வைத்து ப. சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்த அமலாக்கத்துறை தற்போது அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது ப. சிதம்பரம் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்தே போதே உடல் நிலையில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டது. தற்போது இவர் மேலும் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...