பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழந்தை பலி!

அக்டோபர் 28, 2019 350

தூத்துக்குடி(28 அக் 2019): பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழ்ந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் இவரது மனைவி நிஷா இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களது மகள் ரேவதி சஞ்சனா (2 வயது ).

மீனவரான லிங்கேஷ்வரன் இன்று மாலை வீட்டில் தனது மனைவியுடன் டிவியை பார்த்து கொண்டிருந்த போது தனது குழந்தை காணாமல் போகவே அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.

இந்நிலையில் லிங்கேஸ்வரன் தனது வீட்டின் பாத்ரூமை திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் கேனில் இருந்த தண்ணீரை எடுக்க முயற்சித்த குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...