BREAKING NEWS: சிறுவன் சுஜித் உயிரிழப்பு!

அக்டோபர் 29, 2019 757

திருச்சி (29 அக் 2019): சிறுவன் சுஜித் உயிரிழந்ததாக வருவாய் கோட்ட ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பல உபகரணங்கள் மூலம் நான்கு நாட்கள் முயன்றும் பலனின்றி சிறுவன் சுஜித் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இன்னும் உடல் மீட்கப் படவில்லை. துர்நாற்றம் வீசுவதாகவும் சிறுவன் உயிரிழந்துவிட்டதாகவும் இன்னும் ஒரு மணிநேரத்தில் சிறுவனின் உடல், உடல் கூறு ஆய்வுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் வருவாய் கோட்ட ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...