குழந்தை சுஜித் விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை - ஸ்டாலின்!

அக்டோபர் 29, 2019 205

சென்னை (29 அக் 2019): குழந்தை சுஜித் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளது.

நான்கு நாள் போராட்டம் பயனில்லாமல் குழ்ந்தை சுஜித் உயிரிழ்ந்தார். அவருடைய உடல் இன்று காலை அடக்கம் செய்யப் பட்டது.

இந்நிலையில் சுஜித் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி திமுக சார்பில் அளிக்கப் பட்டுள்ளது. சுஜித் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த ஸ்டாலின் இதுகுறித்து பேசுகையில், "குழந்தை மீட்புப் பணி நடந்தபோது சுஜித் வீட்டிற்கு நான் வந்தால் அது அரசியல் சாயம் பூசப்படலாம் என்பதால் அதனை தவிர்த்தேன். மேலும் பேட்டி கொடுப்பதில் காட்டிய ஆர்வத்தை குழந்தையை மீட்பதில் காட்டியிருக்கலாம். ராணுவத்தை அழைத்து முயற்சி மேற்கொண்டிருக்கலாம்" என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...