ஆஹா ரஷ்ய அதிபருக்கும் தமிழ் நாட்டு மேல ஆசை வந்துடுச்சு!

அக்டோபர் 29, 2019 179

சென்னை (29 அக் 2019): ஜல்லிக்கட்டை பார்வையிட வரும் ஜனவரி மாதம் ரஷ்ய அதிபர் புடின் தமிழகம் வருகைபுரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபரும் வருகை தர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் அரசு தரப்பிலிருந்து வெளியாகவில்லை

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...