முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் உட்பட இருவர் கைது!

அக்டோபர் 30, 2019 186

நெல்லை (30 அக் 2019): நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளும், அவரது கணவரும் இன்று கைது செய்யப்பட்டனர்.

பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள வீட்டில் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி உமா மகேஸ்வரியும், அவரது கணவர் முருக சங்கரனும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான விசாரணை, சிபிசிஐடி போலீஸாரிடம் பின்னர் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அருகில் உணவகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதனடிப்படையில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை ஜூலை 31ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், மதுரையில் சீனியம்மாள் வீட்டுக்கு சிபிசிஐடி போலீஸார், டிஎஸ்பி அணில்குமார் தலைமையில் இன்று சென்றனர்.

அங்கு அவரிடமும், அவரது கணவர் சன்னாசியிடமும் விசாரணை நடத்தினர். இதையடுத்து நெல்லை அழைத்து வந்து, 2 பேரையும் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளைங்கோட்டை மத்திய சிறையில் இருவரையும் அடைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...