கடலுக்குச் சென்ற 120 மீனவர்கள் வீடு திரும்பாததால் கலக்கத்தில் உறவினர்கள்!

அக்டோபர் 31, 2019 187

கன்னியாகுமரி (31 அக் 2019): கன்னியா குமரி மாவட்டத்தில் கடலுக்கு சென்ற மீனவர்கள் 15 நாட்களுக்கும் மேலாக வீடு திரும்பாததால் உறவினர்கள் கலக்கத்தில் உள்ள்னர்.

அரபிக்கடலில் புயல்சின்னம் ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பல விசைப்படகு மீனவர்கள் கேரளா, குஜராத், கோவா, லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் கரைசேர்ந்துவிட்டனர்.

கரைதிரும்பாத 120 மீன்வர்கள் எங்கு உள்ளார்கள் என தெரியாத நிலையில், அவர்களை தேடுவதற்காக 'ஏரியல் சர்வே' எனப்படும் வான்வழித் தேடல் செய்து கண்டறியவேண்டும் என தூத்தூர் பகுதி பங்குதந்தைகள் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

2017 ஒக்கி புயல் பாதிப்பால் ஏற்பட்ட வலியிலிருந்து தாங்கள் இன்னும் மீளாதநிலையில், தற்போது காணாமல் போனவர்களை கண்டறிய தாமதம் செய்யக்கூடாது என வேதனையோடு பேசுகின்றனர் மீனவர் குடும்பத்தினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...