கோவை மற்றும் நாகை உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

அக்டோபர் 31, 2019 241

கோவை (31 அக் 2019): கோவை மற்றும் நாகை உள்ளிட்ட பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் இன்று காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாரிபேட்டை மற்றும் ஜிஎம் நகரில் உள்ள இரண்டு பேரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுகிறது. இதேபோல் நாகை மாவட்டம் நாகூரிலும் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டு, ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் (என்ஐஏ), கோவை நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...