போலீசை திடுக்கிட வைத்த திருமணம்!

அக்டோபர் 31, 2019 473

முளகுமூடில் (31 அக் 2019): கன்னியா குமரி மாவட்டத்தில் 15 வயதில் தாய்க்காக ஒரு திருமணமும், 25 வயதில் தனக்காக ஒரு திருமணமும் செய்து போலீசையை திக்குமுக்காட வைத்துள்ளார் ஒரு பெண்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடில் 15 வயதில் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சிறுமி ஒருவர், 25 வயதான நிலையில், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்

இதுகுறித்து பெண்ணின் முதல் கணவர் ரமேஷ் போலீசில் அளித்துள்ள புகாரில், தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தான் துபாய்க்கு வேலைக்கு சென்ற நேரத்தில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று அகில் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்..

மேலும் தனக்கு 18 வயது கூட நிரம்பாத பெண்ணை பெயர் மாற்றி மோசடியாக திருமணம் செய்து விட்டதாக தெரிவிக்கும் ரமேஷ், தற்போது முதல் திருமணத்தை மறைத்து தனது மனைவி பிரீத்தி, அகிலை பாதிரியார் முன்னிலையில் 2 வது திருமணம் செய்துள்ளதாகவும் இதனால் குழந்தைகள் தவிப்பதாகவும் போலீசில் புகார் தெரிவித்தார்.

ரமேஷ்குமார் தினமும் சந்தேகப்பட்டு தன்னை அடித்து உதைத்ததாகவும், இரு குழந்தைகளையும் தன்னிடம் தர மறுத்து விரட்டிய பின்னர் காதலன் அகில் அடைக்கலம் தந்ததாகவும், ரமேஷ்குமார் தன்னை பற்றி முக நூலில் அவதூறு பரப்பியதால் காதலன் அகிலையே முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் பிரீத்தி விளக்கம் அளித்துள்ளார்.

இது இப்படியிருக்க காவல்துறையினரிடம் தனது சிறுவயது வாழ்க்கை குறித்தும் ரமேஷ்குமாருடனான வாழ்க்கை குறித்தும் விவரித்த பிரீத்தி, ஆவணப்படி ரமேஷ்குமாரின் மனைவி தான் அல்ல தனது தாய் தான் என்று கூறி திடுக்கிட வைத்தார்.

15 வயதுள்ள பெண்ணை திருமணம் செய்வதற்காக திருமண பதிவு சான்றிதழில் மணப்பெண்ணின் வயது சான்றுக்கு பதிலாக, மாமியாரின் வயது சான்றிதழை இணைத்து மோசடி செய்ததால், ரமேஷ்குமாரின் மனைவி யார் என்று முடிவுக்கு வர முடியாமல் போலீசாரும் தவித்து நிற்கின்றனர்..!

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...