பாஜக பேரணியில் நடிகை கவுதமி - பாஜகவினர் அவதி!

அக்டோபர் 31, 2019 318

சென்னை (31 அக் 2019): சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த தினம் பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா காந்தி சங்கல்ப யாத்திரையின் நிறைவு விழா ஆகியவை தமிழக பாஜக சார்பில் கொண்டாடப் பட்டது.

சென்னை, அமைந்தகரை பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய நிதிதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மற்றும் நடிகை கவுதமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் பெய்துவரும் கனமழையால் சாலைகளில் அதிகளவு மழைநீர் தேங்கியிருந்ததும், நிர்மாலா சீதாராமன் வருகைக்காக அவசர அவசரமாக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளபட்டதும் குறிப்பிடதக்கது. எனினும் சாலையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்ததால் பேரணியில் கலந்துகொண்டவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...