ஏன் இப்படி பொய் செய்தி பரப்புறீங்க - திருச்சி கலெக்டர் காட்டம்!

அக்டோபர் 31, 2019 216

திருச்சி (31 அக் 2019): திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுஜித் மீட்பு பணிக்காக ரூ. 5 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் கடந்த 25.10.2019 அன்று மாலை சுமாா் 5.30 மணியளவில் சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து அவனை மீட்பதில் தீவிரம் காட்டப்பட்டது. சம்பவ இடத்தில் பூமிக்கடியில் உள்ள பாறை அதிக கடினத்தன்மையுடன் இருந்ததால் எல் அன்ட் டி நிறுவனத்திடம் உதவி கோரியவுடன், அவா்களும் வந்து மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனா்.

இந்த நிறுவனம் மாவட்ட நிா்வாகத்திடம் இதுவரை எந்தவித செலவுத் தொகையும் கோரவில்லை. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கேஎன்ஆா் நிறுவனமும் மாவட்ட நிா்வாகத்திடம் எவ்வித தொகையும் வேண்டாம் எனக் கூறிவிட்டனா். அனைத்து இயந்திரங்களுக்கும் 5 ஆயிரம் லிட்டா் டீசல் மட்டும் வழங்கப்பட்டது. இதர செலவினம் ரூ. 5 லட்சம் ஆகியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வரும் பொய் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். அரசுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூா் ஜேசிபி போன்ற இயந்திர ஒப்பந்ததாரா்கள் எவ்வித செலவுத் தொகையும் வேண்டாம் என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...