ஹெச்.ராஜா ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

நவம்பர் 02, 2019 284

சென்னை (02 நவ 2019): சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா சந்தித்துப் பேசினார்.

முன்னதாக சிறுவன் சுஜித் மரணத்தை அரசியலாக்குவதாக ஸ்டாலின் மீது ஹெச்.ராஜா குற்றம் சட்டியிருந்தார். மேலும் அறிவாலயம் மற்றும் முரசொலி அலுவலகங்கள் பஞ்சமி இடங்களில் அமைந்துள்ளன என்று வந்த தகவலையடுத்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித் மரணத்தை, ஸ்டாலின் அரசியல் ஆக்குவதாகவும் ஹெச்.ராஜா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹெச்.ராஜா ஸ்டாலினை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...