முஸ்லிம் பெண்ணுக்காக மதம் மாறிய தில்லுமுல்லு மாப்பிள்ளை கைது!

நவம்பர் 02, 2019 617

நாகர்கோவில் (02 நவ 2019): முஸ்லிம் விதவை பெண்ணை திருமணம் செய்வதற்காக இஸ்லாம் மதம் மாறி பின்பு மீண்டும் கிறிஸ்தவ மதம் மாறிய கில்லாடி மாப்பிள்ளையை போலீசார் கைது செதுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் தங்க பொன்சன், இவர் மும்பையில் பொறியியலாளராக பணியாற்றியபோது, இஸ்லாமிய விதவை பெண் பாத்திமாவை திருமணம் செய்ய விரும்பி இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளன. இவர்கள் நாகர் கோவில் வந்ததும் பாத்திமாவை தங்க பொன்சன் கொடுமைப் படுத்தியதாக தெரிகிறது. மேலும் மீண்டும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தங்க பொன்சன் வேறொரு கிறிஸ்தவ பெண்ண இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து பாத்திமா அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த நாகர் கோவில் போலீசார் தங்க பொன்சனை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...