பொள்ளாச்சி சம்பவம் நினைவுண்டா? - நீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு!

நவம்பர் 02, 2019 337

சென்னை (02 நவ 2019): பொள்ளாச்சி சம்பவம் நினைவிருக்கிறதா? அந்த குற்ற வழக்கில் தொடர்புடைய இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

பொள்ளாச்சியில் 19 வயதுக் கல்லூரி மாணவி தன்னைப் பாலியல் ரீதியாகத் தாக்கவரும் நபரிடம் `என்ன விட்டுடுங்க அண்ணா’ என்று கெஞ்சிக் கூக்குரலிடும் காணொலி ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டது.

ஒட்டுமொத்தத் தமிழகமும் இதுகுறித்துக் கொந்தளித்த நிலையில் இந்தக் குற்றம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்றன. இதில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் தமிழகக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார்கள். சிபிசிஐடி இந்த வழக்கைக் கையிலெடுத்து விசாரிக்கத் தொடங்கியது.

அதன்பின்னர் சி.பி.ஐ.யும் தன் விசாரணையைத் தொடங்கியது. குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்களில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் இருவர் மீதான குண்டர் சட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளது உயர்நீதிமன்றம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...