வங்க கடல், அரபிக்கடலில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு உருவானதால் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்பட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி உள்ளது. மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியதால் உபரிநீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது.
தற்போது அந்தமான் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி விடும். பின்னர் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது.