திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதா? - ஸ்டாலின் கண்டனம்!

நவம்பர் 03, 2019 182

சென்னை (03 நவ 2019): திருவள்ளுவர் காவி உடையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்ட பா.ஜ.கவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரபூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் "தாய்" மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார். அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் ட்விட்டரில் காவி உடை, நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டு, இறைநம்பிக்கை உள்ளவர்களை பழிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன் என கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த குறளை கற்று திராவிடர் கழகமும், தி.மு.கவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுகளும் தெளியவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனிடையே காவி உடை அணிந்திருந்த திருவள்ளுவருக்கு வெள்ளை உடை அணிவித்தது தி.மு.க தான் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்தநிலையில், திருவள்ளுவரை காவி உடையில் பதிவிட்ட பா.ஜ.கவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்!

எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும்.

சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!’ என்று குறிப்பிடுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...