எடப்பாடி சூப்பராக ஆட்சி செய்கிறார் - சொல்றது யார் தெரியுமா?

நவம்பர் 03, 2019 247

சென்னை (03 நவ 2019): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேலூர் வந்த சரத்குமார் அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஊதிய உயர்வு கோரி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த மாட்டோம் என்று அரசிடம் உத்தரவாதம் அளித்துவிட்டு போராடினால் அவர்களுடன் இணைந்து தானும் போராட தயார்

இரண்டு மாதத்தில் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவை அனைத்தையும் முதல்வர் பழனிசாமி பொய்யாக்கி ஆளுமை திறமையுடன் அதிமுகவை வழிநடத்தி இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...